Home செய்திகள் 2019 லோக் சபா தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி உறுதி – இராமநாதபுரம் திமுக கூட்டத்தில் ஐ.பெரியசாமி உறுதி..

2019 லோக் சபா தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி உறுதி – இராமநாதபுரம் திமுக கூட்டத்தில் ஐ.பெரியசாமி உறுதி..

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் சட்டமன்ற தொகுதி திமுக., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் பரக்கத் மஹாலில் இன்று (26.12.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராலிங்கம் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி பேசுகையில், மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. சாலை வசதி படுமோசமாக உள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட வேலை வாய்ப்பு என்ற ஒரு வித மாய அலையால் பா.ஜ., ஆட்சியை பிடிக்க முடிந்தது. வெற்று கோஷங்கள், பொய் வாக்குறுதிகளால் அரியணை ஏறிய மோடி, நாட்டு மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள் நிறைவேற்ற வில்லை. 2016 நவ. 8 இரவு மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கார்பரேட் நிறுவன அதிபர்களை மேலும் செல்வந்தர்களாக்கி ஏழை, நடுத்தர வர்க்க மக்களை வீதியில் நிற்க வைத்து சாதனை படைத்தார் என்பது நாடறிந்த உண்மை. பாஜ., வின் தவறான கொள்கை முடிவுகளால் சேது சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள தால், தென் தமிழகத்தில் தொழில் வளம் முற்றிலும் பாதித்து புதிய வேலை வாய்ப்புகள் இன்றி பலரின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ள மக்கள் தற்போது ஆட்சி மாற்றம் விரும்புவதால் 2019 லோக் சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி. டில்லியிலும், தமிழகத்திலும் திமுக கொடி பறப்பது உறுதி. திமுக., கூட்டணி ஆட்சி அமைந்தால் விவசாய கடன் மட்டுமின்றி, கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் இல.மேகநாதன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அ.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ., கள் திசை வீரன், கேமுருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.அகமது தம்பி, பெருநாழி போஸ், மண்டபம் பேரூராட்சி செயலாளர் டி.ராஜா, மாவட்ட மீனவரணி துணை செயலாளர் என்.பூவேந்திரன், மண்டபம் ஒன்றிய மீனவரணி துணை செயலாளர் எம்.நம்புராஜன், மாவட்ட பிரதிநிதி ராமமூர்த்தி, சாதிக் பாட்ஷா, மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ஆர்.ராஜகோபால், இ.முபாரக் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!