தற்போதைய அரசியல் சூழல் சுவராஸ்யமானது – பாபா ராம்தேவ் இராமநாதபுரத்தில் பேட்டி..

தேசிய அளவிலான யோகா பயிற்சி 3 நாள் முகாம் இராமேஸ்வரத்தில் இன்று (26.12.18) தொடங்கியது. யோகா குரு பாபாராம்தேவ் தலைமையில் நடைபெறும் யோகா பயிற்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாபா ராம் தேவ் யோகா மையங்களைச் சேர்ந் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பாபா ராம் தேவ் ராமேஸ்வரத்தில் துவங்கிய தேசிய அளவிலான யோகா பயிற்சியின் நோக்கம் ஒரு வளமான ஆன்மீக இந்தியாவை உருவாக்குவது தான். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் நாங்கங் இந்த நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் எந்தவித மதம் மற்றும் அரசியல் சார்பு இல்லாத ஒரு ஆன்மிக நிகழ்ச்சி ஆகும். யோகா என்பது மதம் சார்ந்ததோ அல்லது உடற்பயிற்சி சார்ந்ததோ அல்ல. அது ஒரு அறிவியல் சார்ந்த வாழ்க்கை முறை தான். யோகா மூலம் நம்ம உடம்பில் உள்ள நோய்களை சரிப்படுத்தலாம். யோகா மூலம் முக்கியமான பல நோய்களை நிரந்தரமாக சரி செய்து இருக்கிறோம். யோகா மூலம் மன அழுத்தத்தில் இருந்து வெளிவந்து வாழ்க்கையை நல்ல முறையில் நடத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.

2019 லோக் சபா தேர்தலில் யார் வெற்றி பெறு வார்கள், யார் தோல்வியடைவார்கள் என எனக்கு தெரியாது. இந்தியாவில் நிலையற்ற அரசியல் சூழல் உள்ளது. இதனை நான் யாருக்கும் ஆதரவாகவோ, அல்லது எதிராகவோ நினைத்து சொல்லவில்லை.தற்போதைய அரசியல் சூழல் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, என்றார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..