ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு தென் ரயில்வே பொது மேலாளர் பாராட்டு..

னரயில் விபத்துகளை தவிர்த்து ரயில்களை கவனமாக பாதுகாப்பாக இயக்கிய நான்கு ரயில்வே எஞ்சின் ஓட்டுனர்களுக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர். கே. குல்ஷ்ரேஸ்தா பரிசுகளும் சிறந்த பணிக்கான சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.

நான்கு ரயில் ஓட்டுனர்களில் இரண்டு பேர் மதுரை கோட்டத்தை சேர்ந்தவர்கள். மதுரை ரயில் ஓட்டுநர் த.பெஞ்சமின் மற்றும் உதவி ரயில் ஓட்டுநர் சி.தீபலட்சுமி ஆகிய இருவரும் கடந்த 03.11.2018 அன்று இரவு 08.25 மணிக்கு வண்டி எண் 56735 மதுரை-செங்கோட்டை ரயிலை இயக்கியபோது ராஜபாளையம்- சங்கரன்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் வித்தியாசமான சத்தத்தை கேட்டு சங்கரன்கோவில் நிலைய மேலாளரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் பகுதி பொறியாளர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது ரயில் பாதையில் இரு ரயில் தண்டவாளங்களை இணைக்கும் வெல்டிங் விட்டு போனதை கண்டு, அதை சரி செய்து பின் வரும் ரயில்கள் பாதுகாப்பாக இயக்க வழிவகை செய்தார். இவர்களின் இந்த சிறந்த சேவையை பாராட்டி பொதுமேலாளர் பரிசுகளும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார். மற்ற இரண்டு ரயில் ஓட்டுனர்கள் ஈரோட்டைச் சேர்ந்த பரபட்ரநியானேஸ்வர், ராஜேந்திர சிங் மீனா.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..