தர்மபுரி மாவட்டத்தில் ஜோராக நடைபெறும் அனுமதியில்லாத மது விற்பனை..வீடியோ..

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் இரண்டு மதுக்கடைகள் உள்ளது இருப்பினும் மதுக் கடையில் இருந்து பிளாக்கில் மதுபாட்டில் விற்பவர்கள் தான் அதிகம் கடந்த 6 மாதமாக பாப்பாரப்பட்டியில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு மதுக்கடையில் இருந்து அந்தந்த ஊரில் சிலர் மது பாட்டிலை வாங்கிக் கொண்டு எந்நேரமும் இரவும் பகலும் வீட்டில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் விதிக்கப்பட்ட டாஸ்மாக்கில் மதியம் 12 மணியிலிருந்து 10 இரவு மணி வரையும் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நேரம். ஆனால் அந்தந்த கிராமங்களில் மக்களுக்கு இரவும் பகலும் தொடர்ந்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டில் மேல் அதிக அளவில் லாபம் வைத்து கிராம மக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு கிராமங்களுக்கு மதுபாட்டில்களை ஒட்டுமொத்தமாக வாங்கிக்கொண்டு கிராமங்களில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- சிங்கார வேலு, தர்மபுரி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..