மதுரை – மண்டபம் வழித்தடத்தில் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்…

பாம்பன் ரயில் பாலத்தை பலப்படுத்தும் பணிகளுக்காக 2019 ஜன.2 வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் வழித்தடத்தில் சென்னை ரயில்கள் நீங்கலாக, ஏனைய ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை – மண்டபம் மார்க்கத்தில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மதுரை ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயில் நாளை (டிச.24) அதிகாலை 04: 30 மணிக்கு புறப்பட்டு காலை 07: 30 மணிக்கு மண்டபம் சென்றடையும். மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து நாளை காலை 09: 00 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:00 மணிக்கு மதுரை சென்றடையும்.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து நாளை மாலை 03:30 மணிக்கு புறப்பட்டு மாலை 06 :30 மணிக்கு மண்டபம் சென்றடையும். மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து நாளை இரவு 09:15 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து நாளை இரவு 7: 00 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16780 ராமேஸ்வரம் – திருப்பதி விரைவு ரயில் நாளை மறுதினம் (டிச.25) அதிகாலை 12.15 மணிக்கு புறப்படும் என ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..