Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் மனநல மறுவாழ்வு மையம் திறப்பு விழா ..

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் மனநல மறுவாழ்வு மையம் திறப்பு விழா ..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் மனநல மறுவாழ்வு மையம் திறப்பு விழா புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (21.12.2018) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ  கலந்துகொண்டு மனநல மறுவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.பி.பெஞ்சமின்  கலந்துகொண்டு விழா பேருரையாற்றினார்கள்.

இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது,” கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதற்கு இனங்க நலத்திட்டகள் கோரிக்கை வைத்தால்தான் கிடைக்கும். ஆனால் கோரிக்கை வைக்காமலேயே மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழைää எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வாரி வழங்கினார்கள். மாண்புமிகு அம்மாவின் அரசு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பிடும் வகையிலும் அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் வகையிலும் மனநல மறுவாழ்வு மையத்தினை இங்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.52 இலட்சம் நிதியினை வழங்கியுள்ளது. இங்கு பங்கு தந்தை அவர்கள் இங்கு தற்கால மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னையின் அருளால் பல்வேறு மனநல சிகிச்சை சரி படுத்தப்பட்டு வருகிறது.  எனவே பொதுமக்கள் மனநலம் பாதித்த ஊர்களில் உள்ளவர்கள் மற்றும் நன்பர்களை இம்மையத்திற்கு அழைத்து வந்து அவர்கள் சிறப்பாக சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற உதவிட வேண்டும். இப்பகுதியில் சாலைகளை அமைக்கும் வகையில் கடம்பூர் புளியம்பட்டி சாலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ளது என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ  பேசினார்.

இவ்விழாவில் மாண்புமிகு ஊரக தொழில் துறை அமைச்சர்  பேசியதாவது,”மனநலம் பாதிக்கப்பட்டவர்களை முந்தைய காலங்களில் தெய்வீகத்தால் சுகமடைந்தாலும் அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து சிகிச்சை செய்யும் முறைகள் இருந்தது. தற்போது நவீன சிகிச்சை மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. புளியம்பட்டி மனநல மறுவாழ்வு மையம் திறந்ததன் மூலம் மனநோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை மற்றும் தொழில் பயிற்சி வழங்கிட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மாண்புமிகு ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.பி.பெஞ்சமின் அவர்கள் பேசினார்.

இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் திரு.சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்ட ஆவின் தலைவர் திரு.ந.சின்னத்துரை, திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்ட மீனவர் சங்க தலைவர் சேவியர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குனர் டாக்டர். பரீதா செரீன், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.அ.தே.போஸ்கோ ராஜா, மெஞ்ஞானபுரம் பங்குதந்தை அருள்திரு.குழந்தைராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மோகன், முன்னாள் சேர்மன் காந்தி, தூத்துக்குடி ரெங்கசாமி மருத்துவமனை சிறப்பு மனநல மருத்துவர் டாக்டர் எஸ்.சிவசைலம், மாவட்ட மனநல திட்டம் மனநல மருத்துவர் டாக்டர்.சுவாதிலெட்சுமி, மதுரை சமூக அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எஸ்.கூடலிங்கம், புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் பங்கு தந்தை அருட்திரு.பிரான்சிஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!