நீர் மேலாண்மை திட்டங்களில் அக்கறை இல்லாத அதிமுக அரசு- துரைமுருகன் குற்றசாட்டு….

கடையத்தில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி  திமுக சார்பில் விவசாயிகளின் நலன் காக்கும் மாபெரும் பொதுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் மாநில மருத்துவ அணி தலைவருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, பாப்பாப்குடி ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து, கடையம் ஒன்றிய செயலாளர் குமார்,  முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்மசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா வரவேற்றார். ஆழ்வார்குறிச்சி முன்னாள் நகர செயலாளர் அல்லாபிச்சை  தொகுத்து வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக  கழக பொருளாளரும் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசுகையில், “கலைஞர் ஆட்சி காலத்தில் 49 அணைகள் கட்டப்பட்டது. எந்த ஆணையை சொன்னாலும் எனக்கு பதில் சொல்ல தெரியும். இப்ப உள்ள அமைச்சர்களுக்கு ஆறுகளில் உள்ள அணைகளின் பெயரே தெரியாது. டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிரதமர் ஒரு இரங்கல் செய்தியாவது தெரிவுத்துள்ளாரா இல்லை. கேரளாவில் ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டார். தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் தமிழக அரசு அடிமையாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் நான் நடந்தவன். அனைத்து நீர் நிலைகளைகளையும் நான் பார்த்திக்கிறேன். நான் வகித்த 8 துறைகளில் என் உள்ளத்தை கவர்ந்தது பொதுபணிதுறை. கலைஞரின் செண்டிமெண்டான துறை பொதுபணிதுறை. அண்ணா அவருக்கு அந்த துறையை அளித்தார். கலைஞர் உபதேசங்களுடன் எனக்கு செண்டிமெண்டாக அளித்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் நெல்லை மாவட்டத்தில் நீர் நிலைகள் பாசன பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. நம்பியாறு கருமேணியாறு தாமிரபரணி ஆறு இணைப்பு திட்டம் 360 கோடியில் நிதி ஒதுக்கப்பட்டது.இப்போது பணிகள் முடியவில்லை 800 கோடிக்கு போய்விட்டது. இப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சருக்கு மக்கள் கவலைகளை எண்ணிப் பார்க்க நேரமில்லை காசை எண்ணிவைக்கவே நேரமுள்ளது. 13 ஆண்டுகளாக போராடி காவிரிக்கு நடுவர் மன்றம் கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இன்றைக்கு இருக்ககூடிய அரசிற்கு விவசாயிகளை பற்றிய கவலை இல்லை. அவர்களுக்கு எல்லாம் பணம் தான். நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது விவசாயிகளை அழைத்து நீர்பாசன மாநாடு நடத்தினோம். இப்போதைய அரசு விவசாயிகளை அழைத்து பேசியது கூட கிடையாது.

எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி ஆனால் அவருக்கு விவசாயிகளை பற்றி கவலை இல்லை. இப்போது சேர்ந்துள்ள கூட்டம் அபப்டியான கூட்டம். ரூ 15 லட்சம் பொதுமக்கள் கணக்கில் போடுவதாக சொன்ன பிரதமர் இதுவரை அதை செய்யவில்லை அது கூட பரவாயில்லை.  கஜா புயலால் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு அனுதாபங்கள் கூட சொல்ல முடியாமல் ஊர் ஊராக சென்றுகொண்டிருக்கிறார். திமுக அரசில் 49 அணைகள் கட்டினோம். இப்போதைய ஆட்சியில் ஒரு அணையாவது கட்டியது உண்டா எனவும். கொசஸ்தலை ஆற்றில் அணைகட்ட சரியான திட்டமிடாமல் கட்டிய அணை ஆற்றில் அடித்து சென்றது. இதனால் ரூ 60 கோடி இழப்பு ஏற்பட்டது.  அம்மா உணவகம் என்ற திட்டத்தை அறிவித்துவிட்டு பணமே ஒதுக்காமல் திட்டம் நடந்து வருகிறது. சுகாதார துறைக்கு மருந்து வாங்ககூடிய திட்டத்திற்கு ஒதுக்கிய பணமும் அம்மா உணவகங்களுக்கு செலவு செய்யபட்டு இப்போது காலாவதியான மருந்துகள் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மத்திய அரசிடம் நிதியை பெறமுடியவில்லை. தேவகவுடா பிரதமராக இருந்தபோது முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் காவிரியில் எவ்வளவு நீர் வேண்டுமானாலும் எடுத்துகொள்ளுங்கள் மேகதாதுவில் அணைகட்ட அனுமதியுங்கள் என்றார். அதனை மறுத்துவிட்டார் கலைஞர். விரைவில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் அமையும் அப்போது  விவசாயிகள் பிரச்சனை அணைகள் பிரச்சனை  தீர்க்கப்படும்” என்றார்.

இதில் எம்எல்ஏ டிபிஎம் மைதீன்கான், மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், முன்னாள் எம்பி தங்கவேலு, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் கிரகாம்பெல், மாவட்ட அவைத்தலைவர் அப்பாவு, மாவட்ட துணை செயலாளர் சரஸ்வதி நாராயணன், பொது குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, சிவன்பாண்டியன், மாவட்ட பொருளாளர் சேக்தாவூது,  ஒன்றிய செயலாளர்கள் ஊத்துமலை இளைய ஜமின்தார் ராஜா சுப்பிரமணியபாண்டியன், நகர்மன்ற தலைவர் டாக்டர் சஞ்சீவி, செல்லத்துரை, ஜெயபாலன், அன்பழகன், ஆயிரப்பேரி முத்து«ல், நகர மற்றும் பேரூர் செயலாளர்கள் நெல்சன், இசக்கி பாண்டியன், மாவட்ட பிரதிநதிகள் முத்துபாண்டி, அசோகன், அந்தோணிராஜ், காசிலிங்கம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராஜம் ஜாண், ராசாத்தி, மல்லிகா, செல்வன், ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, சிவகுமார், கிருஷ்ணராஜ், கோமு, மகேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் துரைசிங், ஜம்பு, ஷாஜகான், பீர் முகம்மது, மாரி சுப்பு, மோகன், அருணாசலம், முருகன், வேல்சாமி, செல்வன், சர்க்கரை குமரன், மதிவாணன், மகேஷ்மாயவன், மகேந்திரன், அந்தோணி சாமி, காசிபாண்டியன், ஆறுமுகம், ஜேக்கப்பாண்டி, கழக முன்னோடிகள், நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், உள்பட 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். பொது குழு உறுப்பினர் செல்லத்துரை நன்றி கூறினார்.

கடையம்: பாரதி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..