கோவில்பட்டி பஸ்சில் வந்த பெண்ணிடம் 36 பவுன் நகை திருட்டு…

கோவில்பட்டிக்கு பேருந்தில் வந்த இளம்பெண்ணிடம் 36 பவுன் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் செல்லம்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் கீதாஞ்சலி(30). இவரது பெற்றோர் வீடு கோவில்பட்டியில் உள்ளது. இவர் கடந்த 12-ம் தேதி பேருந்தில் கோவில்பட்டிக்கு பேருந்தில் வந்தார். திருமங்கலத்தில் 3 பெண்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். கீதாஞ்சலியுடன் பேசிக்கொண்டு வந்த அந்த பெண்கள், விருதுநகரில் இறங்கி சென்றுவிட்டனர்.

கீதாஞ்சலி கோவில்பட்டிக்கு வந்து பார்த்தபோது, அவரது பையில் வைத்திருந்த 36 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து கீதாஞ்சலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் வழங்கப்பட்டது. அந்த புகார் குறித்து விசாரிக்க கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துவிஜயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

செய்தியாளர்:- அஹமது