01.01.2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இராமநாதபுரம் ஆட்சியர் பேச்சு..

இராமநாதபுரம் அருகே தொருவளூர் கிராமத்தில் மக்கள் பங்களிப்புடன் கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம் தயாரிப்பு தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் கலந்து கொண்டார்.

அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தங்கள் கிராம வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை , உட்கட்டமைப்பு வசதிகளை தீர்மானித்து அமல்படுத்திட மக்கள் பங்களிப்புடன் “கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம்“ தயார் செய்வதற்காக  மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிப் சிறப்பு கிராம சபைக்கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. வீடு வசதியில்லாத நபர்களை கண்டறிந்து புதிய வீடு கட்டுவதற்கு உதவி செய்தல், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட தேவைக்கேற்ப புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், அனுமதிக்கப்பட்ட அளவில் குளோரினேசன் செய்து உரிய கால இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்தல், ஊரக பகுதிகளில் அமைக்கப்படும்.

கிராம சாலைகள், தெரு சாலைகள் போன்ற திட்டங்களில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்தல், கிராம ஊராட்சி அளவில் கிராம சந்தைகள், வணிக வளாகங்களை உருவாக்கி பராமரித்தல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பயனாளிகளை தேர்வு செய்தல், ஊராட்சி அளவில் சுகாதார குழுக்கள் அமைத்து . மக்களின் ஆரோக்கியம் பாதுகாத்தல் உட்பட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 11-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 29 பொருட்கள் சார்ந்த 18 துறைகளை ஒருங்கிணைத்து பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளன. இக்கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கால்நடைகளை பாதுகாப்பாக அடைப்பதற்கு பொது மந்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறைகளை பயன்படுத்திட வேண்டும். சுற்றுப்புற வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்” என்றார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில், கிராம பொதுமக்கள் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கால்நடை பராமாpப்புத்துறை மண்டல இணை இயக்குநர் முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், வட்டாட்சியர் பொன்.கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல் ஜாமியா, சேவுகப்பெருமாள், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..