Home செய்திகள் மரபு ரீதியான சோதனைக்கு புதிய வகையான இயற்கை ஜெல் கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ள திருநெல்வேலியை சார்ந்த மருத்துவர்….

மரபு ரீதியான சோதனைக்கு புதிய வகையான இயற்கை ஜெல் கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ள திருநெல்வேலியை சார்ந்த மருத்துவர்….

by ஆசிரியர்

திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த டாக்டர் பாத்திமா பெனாசிர் அவர்கள் DNA பரிசோதனைக்கு இயற்கை ஜெல் ( food graded nucleic acid gel )  கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ளார். இரண்டு குழந்தைகளின் தாயான இவர் தற்பொழுது  பெங்களூருவில் வசித்து வருகிறார். அஸூக்கா லைஃப் சைன்ஸ் எனும் பயோடெக்னாலஜி நிறுவனத்தை நடத்திவரும் பெனாசீருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து அவருக்கு வழிகாட்டியாய் அமைந்தவர் அவரது குழந்தைகால சிநேகிதர் அலெக்ஸ், டி.பால் என்பவர் ஆவார். இவரும் பயோ சைன்ஸ் படித்து ஆஸ்திரேலிய நாட்டில் பணிபுரிந்து திரும்பிய ஒரு IISc மாணவராவார்.

டாக்டர் பாத்திமா பெனாசிர் , தனது அஸூக்கா  ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், இந்திய அறிவியல் கழக (Indian Institute of Science) மையத்தில் ஆராய்ச்சி பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலக அளவில் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பரம்பரையாக தொற்றும் கொடிய நோய்கள் குறித்தும், உடனடியாக அதன் மூலத்தை தெரிந்து கொள்ளும் வகையில், புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டார்.

அதன் பலனாக ‘டென்டோ ரங்’ (Tento Rang) என்ற பெயரில் DNA பரிசோதனைக்கு இயற்கை ஜெல்லை கண்டுபிடித்துள்ளார்,     இந்த டென்டோ ரங் என்பது ஒரு கறை (Bio stain)  ஆகும்.                                                                                      உலகில் கண்டுபிடிப்புகள் எத்தனையோ இருந்தாலும் DNA மற்றும் RNA கண்டுபிடிப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் வேளையில் இந்த உணவு தரத்திலான பயோ ஸ்டைன் மிகவும் விசேஷம் வாய்ந்த்தாக அமைந்தது.

இப்படிப்பட்ட கண்டுபிடிப்பில் தான் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் பாத்திமா பெனாசிர் உலக சாதனை படைத்துள்ளார்.அவரின் இயற்கை ஜெல் கண்டுபிடிப்பின் மூலம் கேன்சர், தோல்நோய், குடல்நோய், மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய், போன்ற தீரா வியாதிகள் எவ்வாறு உருவாகிறது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து பெண் விஞ்ஞானி டாக்டர் பாத்திமா பெனாசிர் கூறும்போது”எங்களது இந்த கண்டுபிடிப்பானது 100% இயற்கையோடு ஒன்றியதாகும். இது ஜெல் வகையை சார்ந்ததாகும், மேலும்  எங்கள் கண்டுபிடிப்பு மற்ற கண்டுபிடிப்பை விட மிக விரைவில் அடையாளம் காணக்கூடிய ஒன்றாகும்… அதாவது DNA பரிசோதனைக்கு பிற வேதியியல் பொருட்கள் பயன்படுத்தும்போது 10 முதல் 40 நிமிடம் வரை ரிசல்ட் கிடைக்க நேரம் ஆகும், ஆனால் எங்களின் இந்த இயற்கை கண்டுபிடிப்பானது, 30 நொடிகளில் அடையாளம் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.  எங்கள் கண்டுபிடிப்பு மற்ற கண்டுபிடிப்பை விட ஏழு மடங்கு வீரிய வேகம் கொண்டதாகும். மேலும் மற்ற கண்டிபிடிப்புகள் வேதிப்பொருட்களால் தயாரானவை. அவைகள் அனைத்தும் DNA வின் அமைப்பை (Structure) உருவாக்கும். ஆனால் இந்த இயற்கை கண்டுபிடிப்பானது DNA அமைப்பினை நோயின் அறிகுறி மற்றும் அதன் சுவடுகளே இல்லாமல் முழுவதும் குணமாக்கும் ” என்று இந்த கண்டுபிடிப்பின் உரிமத்தை இந்திய அரசிடமிருந்து எதிர்நோக்கியுள்ளார், உரிமம் கிடைக்கப்பெற்ற பட்சத்தில் DNA வின் இயற்கை கண்டுபிடிப்பை கண்ட உலகின் முதல் இந்திய பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய மருத்துவத்துறையில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த பாத்திமா பெனாசிரின் கண்டுபிடிப்பு தற்போது உலக நாடுகளின் மருத்துவ உலகினை ஈர்த்துள்ளது. எனவே இந்த இயற்கை டென்டோ ரங் ஜெல்ரிற்கு மவுசு அதிகரிக்கவே அதனை அதிகமாக உருவாக்கி உலக நாடுகளுக்கு விற்பனை செய்து தம்மை ஒரு சிறந்த தொழில்முனைபவராகவும் முன்னிருத்தயுள்ளார் பாத்திமா.

செய்தி மற்றும் படம்:- நஸ்ரத் எஸ் ரோஸி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!