கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) நடத்தும் கிராத் மற்றும் பயான் போட்டி ..

NASA வின் கீழ் இயங்கும் அல் மதரஸத்துல் முஹம்மதியாவின் சார்பாக அவ்வமைப்பின் மாணவர்கள்  அபிவிருத்தி குழு நடத்தும் கீழக்கரை மதரஸாக்களுக்கான இஸ்லாமிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டி கிராத் மற்றும் பயான் போட்டி என இரு பிரிவாக 15 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்போட்டிகள் மதரசா வளாகத்தில் ஆண்களுக்கு ஜனவரி 6ம் தேதியும், பெண்களுக்கு ஜனவரி 5ம் தேதியும் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ய கடைசி நாள் வரும் 30/12/2018. போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.