கீழக்கரையில் பல லட்சம் மதிப்புள்ள உயர் கோபுர விளக்கை அமைச்சர் திறந்து வைத்தார் .. மறுபுறம் பல லட்சம் மதிப்புள்ள விளக்கு கடற்கரை பகுதியில் கேட்பாரற்று கிடக்கும் அவலம்..

இன்று (15/12/2018)  கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.4.90 லட்சம் மதிப்பில் எல்.இ.டி., விளக்கு அமைக்கப்பட்டது.  இந்த உயர் மின் கோபுர எல்.இ.டி., விளக்கு சேவையை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். திருப்புல்லாணி அதிமுக ஒன்றிய செயலாளர் முனியாண்டி, கீழக்கரை நகர் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ஹரி நாராயணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி பாக்ய நாதன், ராமநாதபுரம் நகர் துணை செயலாளர் ஆரிப் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கீழக்கரை பொதுமக்கள் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். மேலும்  இந்நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சரிடம் கேபிள் டிவி  நடத்துனர்களால் வசூலிக்கப்படும் அதிக தொகை, பழுதடைந்து கிடக்கும் சிறுமின் விசையினால் இயங்கும் ஆழ்துணை கிணறு மோட்டார்கள் போன்றவற்றை சீர் செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதே போல் பல லட்சம் மதிப்புள்ள உயர் கோபுர விளக்கு ஒன்று கடற்கரை ஓரம் குப்பையாக கிடப்பதையும் சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மக்கள் பயனடைவார்கள்.  இது சம்பந்தமாக வருட கணக்காக சமூக அமைப்புகளும், இணைய தள செய்திகள் வெளியிட்டும் நகராட்சி நிர்வாகம் பொருட்படுத்தாமல் இருப்பதற்கான விடை அறியவில்லை…

செய்தி: முருகன், இராமநாதபுரம்…

புனித ரமலான் வாழ்த்துக்கள்..