Home செய்திகள் கீழக்கரையில் தொலைபேசி அழைப்பில் சர்வதேச தரத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய “MAGAR BUILD ‘N’ PROMO”…

கீழக்கரையில் தொலைபேசி அழைப்பில் சர்வதேச தரத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய “MAGAR BUILD ‘N’ PROMO”…

by ஆசிரியர்

கீழக்கரையில் பல் வேறு சமுதாய மக்கள் வசித்து வரும் ஊராகும். இவ்வூரில் தரமான கட்டிட வேலைகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு வெளியூர் நிறுவனங்களையே சார்ந்து இருக்கும் சூழலே இன்று வரை நிலவி வருகிறது.  இதனால் நேர விரயமும், பணிகள் தீர்ப்பதற்கு கால தாமதங்களும் ஆகிறது.

இந்நிலையை போக்கி கீழக்கரையிலேயே தரமான கட்டிட பணிகள் மற்றும் அனைத்து வகையான மின்சாரம், குளிர் சாதன வசதி பராமரிப்பு மற்றும் பொதுவான அனைத்து வேலைகளும் மேற்கொள்ள கீழக்கரை இளைய தலைமுறையினரால் MAGAR BUILD ‘N’ PROMO எனும் புதிய நிறுவனம் 13/12/2018 அன்று தபால் அலுவலக சாலையில்  துவங்கப்பட உள்ளது.

இந்நிறுவனத்தின் சிறப்பம்சம் வெளிநாடுகளில் உள்ள வசதி போல் பிரத்யேகமான அலைப்பேசி எண்ணில் அழைத்தால் சில நிமிடங்களிலேயே வீட்டிற்கே வந்து அனைத்து பராமரிப்பு வேலைகளையும் செய்து தர கூடிய அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படுகிறது. மேலும் வருடாந்திர மற்றும் மாத ஒப்பந்த அடிப்படையிலும் பராமரிப்பு பணிகளை நியாயமான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் அறியப்படுகிறது.

இந்நிறுவனத்தின் செயல்பாடுகளின் கூடுதல் விபரங்களுக்கு 95667 33864, 98849 76631, 87546 13636 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  இந்நிறுவனம் வெற்றி பெற கீழைநியூஸ் நிறுவனம் வாழ்த்துகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!