Home செய்திகள் கேரள மருத்துவ கழிவுகளை நெல்லையில் கொட்டும் வழக்கு…உரிய விளக்கம் தர மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்தரவு..

கேரள மருத்துவ கழிவுகளை நெல்லையில் கொட்டும் வழக்கு…உரிய விளக்கம் தர மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்தரவு..

by ஆசிரியர்

தமிழக இயற்கை மற்றும் சுற்றுசூழல் மேம்பாட்டு சங்க துணை தலைவர் சிதம்பரம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,” கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை லாரிகள் மூலம் நெல்லை மாவட்டம் புளியங்குடி, சொக்கம்பட்டி கிராமங்களில் கொட்டி வருகின்றனர்.

மருத்துவ கழிவுகளை இப்பகுதியில் கொட்டுவதால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுகிறது,, மருத்துவ கழிவுகளில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நோய் தடுப்பு உபகரணங்கள், மருத்துவ ஆராய்ச்சி பொருட்கள், உயிரியலின் உற்பத்தி அல்லது பரிசோதனை பொருள்கள், மனித உடற்கூறியல் திசுக்கள்,உறுப்புகள் மற்றும் உடல் பாகங்கள், கால்நடைகளில் இருந்து ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட விலங்கு கழிவுகள், மைக்ரோபயாலஜி மற்றும் பையோடெக்னாலஜி கழிவுகள்,ஊசிகள், மருத்துவ கண்ணாடி பொருள்கள் ஆகியவற்றை முறையாக மருத்துவ விதிகளை பயன்படுத்தி அழிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் திறந்தவெளியில் எங்கள் கிராமத்தில் கொட்டி வருகின்றனர். கழிவுகளை மருத்துவ விதிமுறைகளை பயன்படுத்தி அழிக்காமல் திறந்தவெளியில் கொட்டுவதால் ஹெச்ஐவி உள்ளிட்ட நோய்கள் பொதுமக்களை தாக்குகிறது. நெல்லை மாவட்ட எல்லை பகுதிகளிலும் மருத்துவ கழிவுகள் கொட்டபடுகிறது. இவற்றை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கையாளுவதால் துப்புறவு பணியாளர்களுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் நவம்பர்12 ஆம் தேதி கேரளாவில் இருந்து செங்கோட்டை வழியாக புளியங்குடி கிராமத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டபட்டது.

மேலும் நவம்பர் 21 ஆம் தேதி 27 லாரிகளில் நெல்லை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டபட்டது. இவ்வாறு திறந்த வெளியில் மருத்து கழிவுகளை கொட்டுவது மருத்துவம் மேம்படுத்துதல் மற்றும் கையாளுதல் விதிகளுக்கு எதிராக உள்ளது. கேரளா மருத்துவ கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கொட்டிவைக்கபட்டுள்ள மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற உத்தரவிட வேண்டும் ” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கினை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!