மதுரையில் காவல்துறை சார்பாக 13/12/2018 அன்று மனுதாரர்கள் குறை தீர்க்கும் நாள்..

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் (குடும்ப பிரச்சனைகள், வரதட்சணை கொடுமைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பாலியல் துன்புறுத்தல், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடுமைகள் தொடர்பான மனுக்களை ஏற்கனவே காவல் ஆணையர் அவர்களிடம் நேரடியாக கொடுத்த மனுதாரர்கள், காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்களிடம் நேரடியாக மனு கொடுத்த மனுதாரர்கள் காவல் உதவி ஆணையர் (வரதட்சணை ஒழிப்பு பிரிவு) அவர்களிடம் நேரடியாக கொடுத்த மனுதாரர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களான தல்லாகுளம், திருப்பரங்குன்றம், தெற்கு, டவுன் மற்றும் ஆகிய காவல் நிலையங்களில் மனு கொடுத்து தற்போது மனு விசாரணை முடிவடையாமல் நிலுவையிலுள்ள மனுதாரர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் வரும் 13.12.2018 ம் தேதி காலை 09.00 மணிக்கு மதுரை மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் மனுதாரர்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வாதற்காக சிறப்பு மனு மேல்விசாரணை முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். மனு விசாரணை முடிவடையாமல் நிலுவையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..