இராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் சனவேலியை சேர்ந்த ஜோதிடர் சங்கரபாண்டியன். நேற்று தினம் (06.12 2018) மதியம் இவர் வீட்டு கதவு திறந்து கிடந்தது. வெளியே சென்றிருந்த சங்கரபாண்டியன் வீடு திரும்பிய போது, வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் சங்கரபாண்டியன் வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓட முயன்றார். அப்பகுதியைச் மக்கள் . அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த 13 பவுன் நகை, ரொக்கம் திருடு போனதாக போலீசில் சங்கரபாண்டியன் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக ஆர் எஸ் மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீசில் ஒப்படைக்கப்பட்ட காயமடைந்த வாலிபர் சென்னை வியாசர்பாடி சுப்ரமணியன் மகன் சந்தோஷ் குமார் 28 என தெரிந்தது. அதே நேரம் கைது செய்யப்பட்டவர், தான் இராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி சென்ற போது இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள கண்மாய் சென்று விட்டு திரும்பிய பொழுது தன்னை அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் கட்டி போட்டு கண்ணில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக தாக்கியதாக போலீசில் புகார் கொடுத்தார்.

இது குறித்து ஆர் எஸ் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரித்து வருகிறார். தாக்குதலில் காயமடைந்த சந்தோஷ்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் இருந்தார். இன்று (07/12/2018) அதிகாலை சந்தோஷ்குமார் கழிப்பறை செல்வதாக கூறிச் சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்ப வில்லை. போலீசார் தேடிச் சென்றபோது கழிப்பறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து அது வழியே தப்பி ஓடியது தெரிந்தது. ஓட்டம் பிடித்த சந்தோஷ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சந்தோஷ்குமாரை தப்ப விட்டு பாதுகாப்பு பணியிலிருந்த 4 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..