விரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..

யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் (NPCI – National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன.

விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது.

யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI – National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன்,

மூத்த நிருபர்,கீழை நியூஸ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..