தங்கச்சிமடம் அரசு மேல்நிலை பள்ளியில் உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்ச்சி ..

தங்கச்சிமடத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்றைய தினம் (5.12.2018)வில் மெடல்ஸ் நிறுவனத்தின் உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்வானது சிறப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் உயர்திரு கோபிநாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வில் மெடல்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் 35 மாணவ மாணவியர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை சிறப்புடன் வெளிப்படுத்தினர்.

இதில் மாணவர்கள் சிலம்பம், யோகா, கட்டுரை எழுதுதல், பாடுதல், நடனம், பேச்சு, பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது திறமைகளை சிறப்புடன் வெளிப்படுத்திய மாணவியருக்கும் உயர்வோ உயரச் செய்வோம் நிகழ்வின் பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சரியாக காலை 11 மணியளவில் துவங்கி மாலை 01.00 மணி அளவில் முடிவு பெற்றது. இந்த நிகழ்வில் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர் மாபு சுபுஹான் என்பவர் தன் திறமையை கவிதை வாயிலாக வெளிப்படுத்தியது வியப்பாக இருந்தது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் முன்னேற்றத்தில் வில்மெடல்ஸ் நிறுவனம் எப்போதும் ஈடுபாடு கொண்டு இருக்கிறது என்பதற்குச் சான்றாக  பள்ளியிலேயே நடந்த உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியப் பெருமக்கள் மாணவ, மாணவியருக்கு இது போன்ற வாய்ப்புகள் பள்ளி தேடி வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என வெளிப்படுத்தினர்.

மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில்,  “இன்னும் பல நிறுவனங்களும் அரசு பள்ளிகளை கண்டெடுத்து பள்ளி மாணவ, மாணவியரின் திறமைகளை ஊக்கப்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..