பாபர் மஸ்ஜித் இடத்தை ஒப்படைக்க கோரி தொண்டியில் தமுமுக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் தமுமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.முகமது இக்பால் (தமுமுக, மமக) தலைமை வகித்தார். இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் (தமுமுக, மமக) பட்டாணி மீரான் வரவேற்றார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக பொறுப்பு குழு நிர்வாகிகள் கீழக்கரை பாதுஷா, பனைக்குளம் பரக்கத்துல்லாஹ், திருப்புல்லாணி ரைஸ் இப்ராஹிம், முகவை அப்துல்லா, மேற்கு மாவட்ட செயலாளர்கள் எம்.முகமது முஹித்துல்லாஹ் (தமுமுக), எஸ்.தாஜ் முகமது (மனிதநேய மக்கள் கட்சி), மாவட்ட பொருளாளர் எம். வாவா ராவுத்தர் (மனித நேய மக்கள் கட்சி), மாவட்ட துணைத் தலைவர் ஏ .சாதிக் பாட்ஷா (தமுமுக) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, மனிதநேய மக்கள் கட்சி இலக்கிய அணி மாநில செயலாளர் தாஹிர் பாட்ஷா, தமிழ் புலிகள் அமைப்பு பொதுச் செயலாளர் பேரறிவாளன், தமுமுக தலைமை கழக பேச்சாளர் நவ்சாத் ஆகியோர் கண்டன உரை பேசினர். தொண்டி பேரூராட்சி தமுமுக தலைவர் காதர் நன்றி கூறினார். பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், அதே இடத்தில் பாபர் மசூதி மீண்டும் கட்ட வேண்டும் உள்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இராமநாதபுரம் கூடுதல் எஸ்பி. வெள்ளைத்துரை, திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆய்வாளர்கள் பிரபு ( தொண்டி ), புவனேஸ்வரி (ஆர்எஸ் மங்கலம்) , ராணி முத்து ( திருப்பாலைக்குடி) தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.