Home செய்திகள் இராமநாதபுரத்தில் பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்ட வலியுறுத்தி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரத்தில் பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்ட வலியுறுத்தி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்…

by ஆசிரியர்

டிசம்பர்-6, இன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் sdpi சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முஸ்லிம்களின் இறையில்லமான பாபர் மஸ்ஜித் 1992 டிச.6ல் தான் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அகற்ற வேண்டும், பாபர் மஜ்ஜித்தை அதே இடத்தில் மீண்டும் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முகமது சுலைமான், சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக் சாஹிப், விமன்ஸ் இந்தியா மாநில பொருளாளர் உம்முல் தவுலத்யா, மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது இபுராகிம், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பசீர் அலி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி தவ முனியசாமி, விடுதலை சிறுத்தை கட்சி மண்டல அமைப்புச் செயலாளர் முகமது யாசின், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் முருகன், தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக மாவட்ட செயலாளர் பைரோஸ்கான் வரவேற்க, இராமநாதபுரம் நகர் தலைவர் அஜ்மல் சரீப் நன்றி கூறினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக் சாஹிப் கூறுகையில், உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை பெற்றுத்தந்த பாபர் மஸ்ஜித் இடிப்பு நடைபெற்று இன்றுடன் 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை. பாபர் மஸ்ஜித் இடிப்பில் குற்றவாளிகளாக நீதிபதி லிபர்ஹான் கமிஷனரல் அடையாளம் காட்டப்பட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. அதே இடத்தில் பாபர் மஜ்ஜித் மீண்டும் கட்டித் தர வேண்டும் என வாக்குறுதி அளித்த மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய இறையாண்மை மிக்க சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு ஆக கட்டி எழுப்ப உறுதிபூண்டுள்ளோம் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் அதிகாரமிக்க பதவிகளில் அமர்ந்திருப்பது மாபெரும் அநீதி. இத்தனை ஆண்டுகளாக முஸ்லிம் சமூகமும் தேச நலன் விரும்பிகளும் ஒருமித்த குரலில் நீதிக்காக குரல் கொடுத்துள்ளனர்.

நீதித்துறையின் இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் சூழலில் எந்த முயற்சிகளையும் முஸ்லிம்கள் ஏற்கமாட்டர். நீதிக்காக முஸ்லிம்களுடன் எஸ்டிபிஐ தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும், என்றார். போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிழக்கு மாவட்ட ஊடக தொடர்பாளர் அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!