இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.15 லட்சம் கஜா புயல் நிவாரண பொருட்கள்..

கஜ புயல் பாதித்த மக்களுக்கு இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரித்து வழங்க மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தினார். இதன்படி , திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) வழிகாட்டுதல் படி நன்கொடையாளர்கள், முக்கிய பிரமுர்கள், முஸ்லிம் ஜமாத்தாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன்பேரில் கிடைக்கப் பெற்ற மளிகை பொருட்கள், அரிசி, போர்வை, கைலி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) உம்முல் ஜாமியா , வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ )சேவுக பெருமாள் ஆகியோரால் ரூ.15.00 இலட்சம் மதிப்பில் பொருட்கள் சேகரிகப்பட்டன. சேகரித்த பொருட்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்ஸி லீமா அமாலினி, ஊராட்சிகள் உதவிஇயக்குநர் ஆ. செல்லத்துரை ஆகியோர் பார்வையிட்டனர்.

Be the first to comment

Leave a Reply