தேனி பெரியகுளத்தில் டிசம்பர்-6 தினத்தையொட்டி தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் …

தேனி பெரியகுளத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாளை” பாசிச எதிர்ப்பு நாளாக கொண்டு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் அம்ஜத் மீரான் தலைமை தாங்கினார். அபீப் ரகுமான் (பெரியகுளம் பொறுப்புக் குழு தலைவர்) வரவேற்புரையாற்றினார்.

மாநில செயலாளர் (சுற்றுச்சூழல் அணி) ஹாருன் ரசீது , மற்றும் பாளைபாருக் (மாநில பொருளாளர் மனிதநேய தொழிற்சங்கம்)ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் கம்பம் ராமகிருஷ்ணன் (திமுக)கூடலூர் முருகேசன் (காங்கிரஸ்) இராமச்சந்தின் (CPI (M)) இன்சாப் மாநில துணை செயலாளர் அபுதாஹீர், முஸ்லீம் யூத் லீக் மாவட்ட தலைவர் முகமது இப்ராஹிம் உஸ்மானி, ப.நாகரத்தின் .(வி.சி க தேனிகிழக்கு மாவட்ட செயலாளர்) சோ.சுருளி (விசிக மேற்கு மாவட்ட செயலாளர்) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.தேனி நகர பொறுப்புக் குழு தலைவர் தையூப் கான் நன்றியுரை கூறினார்.

செய்தியாளர் A .சாதிக் பாட்சா, நிருபர், தேனி மாவட்டம்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..