மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில் சேவை ரத்து ..

பாம்பன் ரயில் பாலத்தின் ஒரு பகுதியில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பராமரிப்பு பணிகள் நேற்று (04.12.2018) முதல் துவங்கியுள்ளது. இந்த பணிகள் கூடுதல் பாதுகாப்புக்காக செய்யப்படுகிறது. இதன் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் ரயில்கள் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. இராமேஸ்வரம் பகுதியில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். பயணிகளை மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இராமேஸ்வரத்திற்கு மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply