கஜா புயல் பாதித்தோருக்கு மண்டபம் மீனவர்கள் நிவாரணம்…

கஜா புயல் பாதித்தோருக்கு உதவும் வகையில், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு  ரூ.1 லட்சத்திற்கான காசோலையை இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரியிடம் மண்டபம் அனைத்து மீன்பிடி விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் வழங்கினர்.

மண்டபம் அனைத்து மீன்பிடி விசைப்படகு மீனவர் சங்கம் சார்பாக தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் மக்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 2 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர் கோபிநாத் மண்டபம் அனைத்து மீன்பிடி விசைப்படகு மீனவர்கள் சங்க  தலைவர் சி.கணபதி, செயலாளர் எம்.ஜாகிர் உசேன், செயல் தலைவர் பி.பாலசுப்ரமணியன், (முன்னாள் கவுன்சிலர்) உதவி தலைவர்கள் எம்.செய்யதுசுல்தான்,  எஸ்.பாலன் (முன்னாள் கவுன்சிலர்) பொருளாளர்கள்  எஸ்.நாகராஜன் (மண்டபம் பேரூராட்சி துணை சேர்மன்) சி.செல்வக்குமார் மீன்வளத்துறை அலுவலர்கள்  உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..