காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்..

காட்பாடி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று (5-ம் தேதி) மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை முழு இரவு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு கோரீக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் தாலுகா சங்க பொறுப்பாளர் ஜோதீஸ்வரன் தலைமையில் 36 கிராம நிருவாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நாளை மறுநாள் மாவட்ட கலெக்டர் அலுவகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கே.எம்.வாரியார், மாவட்ட செய்தியாளர், வேலூர்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..