கடலாடி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் ..

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம், இணையவழி சான்றிதழ், பட்டாமாறுதல் ஒப்புதல் செய்வதற்கு இணைய பயன்பாட்டு கட்டணம் வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்கள் முன்பு இரவு நேர காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

கடலாடி தாலுகா அலுவலகம் முன் வட்டச்செயலாளர் கா.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கடலாடி வட்டத்தில் 18 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..