திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்…

கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முழு இரவு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். பிறப்பிலிருந்து மனிதன் இறக்கும் வரை இடைப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வழங்குவது அவர்களின் முக்கியப் பணி, இவற்றில் 50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே கணினி மூலம் ஆன்லைன் பணிகளாக மாற்றிவிட்டது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பணியை மட்டும் தொழில்நுட்ப பணியாக வரையறை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதேபோல் பதவி உயர்வில் 30% மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதால் 6 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் சூழல் உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களில் 90% பேர் பட்டதாரிகளாக இருப்பதாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தாமதமாவதாலும், கிரேட்-1, கிரேட்-2 என பணியை பணிபுரியும் காலத்தைப் பொறுத்து வரையறை செய்து அதற்கான ஊதியம் வழங்க வேண்டும்.

மேலும் சொந்த மாவட்டங்களைவிட்டு மற்ற மாவட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முழு இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் . விடிய விடிய நடைபெற்ற இந்த தர்ணாவிற்கு மாவட்டச் துணை தலைவர் முருகன் தலைமை ஏற்றார்..இந்த போராட்டத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட வட்டத் தலைவர் மாதவன் வட்ட செயலாளர் ரமேஷ் உள்பட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்துகொண்டனர்…

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..