காட்பாடி மற்றும் வேலூரில் பல இடங்களில் முன்னாள் முதல்வர் நினைவு தினம்..

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள லட்சுமி பவனில் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது வேலூர் மாநகர அதிமுக 6-வது வட்ட செயலாளர் K. R, ரவிEX – M.C மற்றும் தனலட்சுமி தலைமை தாங்கினர் படத்திற்கு வேலூர் கிழக்கு அதிமுக மாவட்ட துணை செயலாளர் SRK அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அவைத் தலைவர் மனோகர் முன்னாள் நகர செயலாளர் KR பாபு பிரதிநிதி சோமசுந்தரம் Ex-MC மாணவரணி செயலாளர் அண்ணாதுரை மார்க்கபந்து கோவிந்தசாமிவேலு ரவி சோடா மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், ஏற்பாட்டை மாநகராட்சி 6-வது வட்ட செயலாளர் லட்சுமி பவன் KR.ரவிEx.MC செய்து இருந்தார்.

காட்பாடியில் தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு காட்பாடி MGR நகர் அருகில் ஜெ, படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் கிளை செயலாளர் துர்கா மகால் ராஜேந்திரன் மாவட்ட பிரதிநி சோமசுந்தரம் Ex-MC வட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்

அதே போல் வேலூரில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் அமமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளில் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது வேலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்பு பால் பாலாஜி கழக அமைப்பு செயலாளர் ஞானசேகரன் மற்றும் பகுதி செயலாளர்கள் துரையரசன் விஜயராஜ் மோகன் மற்றும் கழகத்தினர் பங்கேற்றனர்.

கே.எம்.வாரியார், மாவட்ட செய்தியாளர்-வேலூர்

 

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..