மறக்கவில்லை அந்த உரிமைகள் பறிக்கப்பட்ட தினத்தை..

மறக்கவில்லை நெஞ்சம்…
மறந்திடுமா காவிகளின் வஞ்சம்!

நாங்கள் இழந்தது எங்களின் இறையில்லத்தை மட்டுமல்ல…
எங்களின் வழிபாட்டு உரிமையை!

இந்த நாளில் இழிவடைந்தது நாங்களல்ல…
இந்தியாவின் இறையாண்மை!

அய்ந்து நூறு ஆண்டுகால சின்னம்…
அய்ம்பதாண்டு கால ஆரியத்தால் காரியம் முடிக்கப்பட்டது!

கரசேவை என்ற பெயரில் காவிகள் இடிக்க கைகட்டி நின்றது இந்தியாவின் மனசாட்சி..
காவல் காத்தது காவி(காக்கி)யுடை தரித்த தரித்திரங்கள்!

இல்லாத ராமனுக்காக இறையில்லத்தை இடித்த தட்டுவானிகளுக்குத் தண்டனையோ ஒரே ஒருநாளாம்… அறிந்து கொள்க. ஓரிறையின் முன் ஒடுங்கி நிற்கும் ஒரு நாள்வரும்!

பொல்லாத பயங்கரவாதிகள் இடித்த பள்ளியை மூன்று பங்காக்குகிறது மூளை கெட்ட நீதிமன்றம்…அதில்
அல்லாஹ்வின் ஆலயத்தில் அனுவளவும் அதிகாரமற்ற மூடர்களுக்கு இரு பங்காம்!

கரசேவை என்ற பெயரில் கதைவிட்டு கதை முடித்த காவிகளே! திடமாக அறிந்து கொள்க.

எங்களின் உடல்களை செங்கல்களாக்கி…
எங்களின் உதிரங்களை கலவையாக்கியேனும் எழுப்பியே தீருவோம் இறையில்லத்தை!

எங்களில் ஒரே ஒருவர் உயிரோடு இருக்கும் வரையிலும் உனது மோடியாலும் பேடியாலும் ஒரு தம்படி இடத்தை தொடவும் முடியாது…விடவும் மாட்டோம்!

அறிந்து கொள்க.
உச்சநீதிமன்றம் உச்சிக்குடுமி தீர்ப்பளிக்குமானால் அந்த நாள் எங்களின் புதிய பத்ர் களமாக இருக்கும் இறை நாடினால்.

✍முகவை அப்பாஸ்..

To Download Keelainews Android Application – Click on the Image