Home அறிவிப்புகள் இன்று (04/12/2018) இராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயில் அனைத்தும் ரத்து…அஜமீர் ரயில் நேரம் மாற்றம்…

இன்று (04/12/2018) இராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயில் அனைத்தும் ரத்து…அஜமீர் ரயில் நேரம் மாற்றம்…

by ஆசிரியர்

மதுரை கோட்டத்தில் அவசர பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 05.30 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (04.12.2018) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 08.15 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (04.12.2018) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில் நேரம் மாற்றியமைப்பு:- 19604 ராமேஸ்வரம் – அஜ்மீர் ஹம்ஸபார் விரைவு ரயில், இன்று(டிச 4) இரவு 10:15க்கு பதிலாக, நாளை(டிச 5) காலை 7மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும். செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!