பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விரிசல்… ரயில் நேரங்களில் மாற்றம்..

நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் பாம்பன் கடல் பகுதியை கடந்த செல்லும் போது ரயில்வே தூக்கு பாலம் திறக்கப்படுகிறது. இன் து நண்பகல் சென்னை படகுகள் கடந்து செல்ல தூக்கு பாலத்தை திறந்த போது சக்கரம் அருகே திடீரென விரிசல் ஏற்பட்டது. ரயில்வே பணியாளர்கள் விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் விரிசலை சரி செய்ய இயலாமல் போனது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதுரை கோட்டத்தில் அவசர பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

56721 மதுரை – ( 12: 40) ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே 04.12.2018 அன்று பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

56726 ராமேஸ்வரம் – ( 18:00 மணி) மதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே 04.12.2018 அன்று பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.

56829 திருச்சிராப்பள்ளி – (06:40) ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே 04.12.2018 அன்று பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.

56830 ராமேஸ்வரம் – ( 13:55 மணி) திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே 04.12.2018 அன்று பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.

56725 மதுரை ( 18:10 மணி) ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே 04.12.2018 அன்று பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. மண்டபம் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு இன்று மாலை 5.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இரவு 9:00 மணிக்கு மண்டபம் நிலையத்தில் இருந்து கிளம்பும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து காலி பெட்டிகளாக மண்டபம் கொண்டு வரப்பட உள்ளது.

இரவு 8:15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பும் சேது எக்ஸ்பிரஸ், இரவு 11 மணிக்கு கிளம்பும் அஜ்மிர் அதிவிரைவு ரயில் குறித்து அறிவிப்பு வரவில்லை.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..