Home செய்திகள் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வலியுறுத்தி ஒருநாள் புறநோயாளிகள் புறக்கணிப்பு(one day boycott) போராட்டம்…

அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வலியுறுத்தி ஒருநாள் புறநோயாளிகள் புறக்கணிப்பு(one day boycott) போராட்டம்…

by ஆசிரியர்

திருப்பத்தூர் & வேலூர் சுகாதார மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் மருத்துவக் குழு, பள்ளிசிறார் நல மருத்துவர்கள், வட்டார மருத்துவ மனைகள், பொது மருத்துவமனைகள், ESI மருத்துவமனை, அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உட்பட வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு மருத்துவர்களும், சுமார் 500-க்கும் மேற்பட்டார் இந்த புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

👉 அரசு பணியில் சேரும் போது பிற மாநில அரசு மருத்துவர்களும், மத்திய அரசு மருத்துவர்களும், தமிழ்நாடு அரசு மருத்துவர்களும் ஒரே மாதிரியான ஊதியத்தில் தான் பணியில் அமர்த்தப் படுகிறார்கள்.

👉 ஆனால் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 8 வருடங்களுக்கு பிறகுதான் முதல் முறையாக ஊதிய உயர்வே வழங்கப்படுகிறது. அதுவும் வெறும் 300 ரூபாய் உயர்த்தி, 5700 என்ற கொடுமையான கிரேடு பேவில் நிறுத்துகிறார்கள். ஆனால் பிற இடங்களில், பணியில் சேர்ந்த நான்கே வருடங்களில், முதலாவது ஊதிய உயர்வாக 6600 கிரேடு பேவுக்கு ஈடான தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பணி புரியும் அரசு மருத்துவர்களுக்கு இந்த கிரேடு பதினைந்து வருடங்ளுக்கு பிறகே வழங்கப்படுகிறது.

👉 அடுத்தபடியாக, பிற இடங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வாக ஒன்பது வருடத்தில் கிரேடு பே ₹7600-க்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஊதியம் *பதினேழாம் ஆண்டிற்கு பிறகு தான்* வழங்கப்படுகிறது.

👉 பிற இடங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு 13-வது வருடத்திலேயே மூன்றாவது ஊதிய உயர்வாக, கிரேடு பே 8700-க்கு ஈடான ஊதியம்(இது ஊதியப்பட்டை 4-ல் பொருந்துகிறது) வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இது *20 வருடங்களுக்கு பிறகுதான்* வழங்கப்படுகிறது.

👉 இறுதியாக, மத்திய அரசு மருத்துவர்களுக்கு நான்காவது ஊதிய உயர்வாக இருபது வருடத்தில் கிரேடு பே ₹ 10000 ஊதியம் வழங்கப்படுகிறது. இப்படியொரு ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்குவதே இல்லை.

நமக்கு மிக அருகாமையில் இருக்கும் பாண்டிச்சேரி, கர்நாடகா மற்றும் வட இந்திய மாநிலங்களான பீகார், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், மிசோரம் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு மருத்துவர்களை விட மிக அதிகமாக ஊதியம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமில்லாமல், பிற இடங்களில் மருத்துவர்களுக்கு தனியார் பயிற்சி செய்யாமைக்கான படி(NPA), அவசர அழைப்புக்கான படி, பயணப்படி, தங்குவதற்கான படி உட்பட மாநில அரசு வழங்காத பல்வேறு வகையான பணப்படிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு 13-20 வருட இடைப்பட்ட ஏழு வருடத்தில், மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது.

மேலும் பிற அரசுகளுக்கு கீழ் பணிபுரியும் ஒரு MBBS, சிறப்பு மருத்துவருக்கும்(Specialty Doctor) மருத்துவருக்கும், தமிழக அரசின் கீழ் பணிபுரியும் MBBS, சிறப்பு மருத்துவருக்கும்(Specialty Doctor) மருத்துவருக்கும் பணி மூப்பு காலத்தில்(at the age of retirement) மிகமிக பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.

தமிழக சுகாதாரம் உலக அளவில் ஒப்பிடப்பட்டாலும், தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியம் பிற அண்டை மாநிலங்களை கூட ஒப்பிட முடியாத அளவில் தான் இருக்கிறது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அரசு மருத்துவர்கள் பல்வேறு வகையான ஜனநாயக ரீதியிலாக போராடியும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஜூலை 21-ல் திண்டுக்கல்லில் JACGDA முதல் மாநில மாநாட்டை கூட்டி, அதில் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து, தொடர்ந்து திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படடு, கடந்த செப்டம்பர் 18-ல் ஊதிய செயற்பாட்டு குழுவை(Pay Working group) அரசு அமைத்தது. அரசு மருத்துவர்களும் அதில் இணைந்து பணியாற்றி, நமக்கும் பிற அரசுகளுக்கும் இருக்கும் பாகுபாட்டை கடந்த அக்டோபர் 16-ல் எடுத்து சொன்னார்கள். தமிழக அரசும் இப்பாகுபாட்டை களைய விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திறனாய்வு கூட்டங்களை புறக்கணிப்பது, மரு.முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை நிறுத்தியது, சிறப்பு முகாம்களை ரத்து செய்தது உட்பட பல்வேறுகட்ட மக்கள் நேரடி பாதிப்பு இல்லாத போராட்டங்களில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தாலும், அரசு கண்டுகொள்ளவில்லை.

எனவே இன்று தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், புறநோயாளிகள் புறக்கணிப்பு நடைபெறுகிறது. பின்வரும் அடுத்தடுத்த போராட்டங்களையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

1. 08/12/18 முதல் 13/12/8 வரை முன் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவது(Elective surgery boycott), முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தையும், மருத்துவ மாணவ வகுப்புகளையும் புறக்கணிப்பது

2. அரசு கண்டுகொள்ளாவிட்டால், 08/12/18 முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜினாமா கடிதங்களை பெறுவது

3. 10/12/18-முதல்வர் அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்(பி.ப01.00 மணி முதல் 05.00 வரை)

4. 12/12/18-புறநோயாளிகள் சிகிச்சைகள் நிறுத்துவது(OP boycott)

5. 13/12/18-ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

6. 27/12/18 முதல் 29/12/18 வரை மூன்றுநாள் தொடர் வேலைநிறுத்தம்.

ஒரே மாதிரியான வேலையை பார்க்கும் இருவரில் ஒருவருக்கு அதிகமாகவும், ஒருவருக்கு குறைவாகவும் ஊதியம் வழங்குவது நம் நாட்டு அரசியலமைப்பு சட்ட விதி 39D-க்கு எதிரானது.

வேலைக்கேற்ற ஊதியம் வழங்காமல் தமிழக அரசு ஏமாற்றுவது அரசு மருத்துவர்களை அவமானப் படுத்துவதாக உள்ளது.

இந்த பாகுபாட்டை அரசு சரிசெய்யுமா?

செய்தி சேகரிப்பு:- கே.எம்.வாரியார், செய்தியாளர் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!