கீழக்கரையில் பல் வேறு இடங்களில் இன்று (04/12/208)திமுக உறுப்பினர் அட்டை வினியோகம்..

கீழக்கரையில் இன்று (04/12/2018) திமுக கட்சியின் உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டை நேரடியாக அன்பு நகர், புது கிழக்குத் தெரு, சின்னக்கடைத் தெரு மற்றும் வடக்கும் தெரு பகுதிகளில் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த உறுப்பினர் அட்டை திமுக தலைமை கழகத்திலிருந்து இராமநாதபுர மாவட்ட பொறுப்பாளராக அனுப்பப்பட்ட நாமக்கல் இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ் மற்றும் நாமக்கல் ஒன்றிய செயலாளர் துரை சாமி ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அஹ்மது தலைமையில் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் திமுக துணை செயலாளர் கென்னடி, ஜமால் ஃபாரூக், அவைத் தலைவர் மணிகண்டன் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..