பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் புகழ் போற்றும் வகையில் துபாயில் பிறந்த நாள் விழா..

துபாய் துணைத் தூதரகத்தில் “கருப்பு நினைவலைகள்” என்ற தலைப்பில் என்.எஸ் கிருஷ்ணன் பிறந்த நாள் விழா மற்றும் டி.ஏ மதுரம் நூற்றாண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் 30/11/2018 வெள்ளிக்கிழமை மாலை 6-9 PM நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருமதி.சக்தி சோனா, டாக்டர் ஜெயந்திமாலா சுரேஷ மற்றும் லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு மற்றும் அறிமுக உரையை திரு.நாகா வழங்கினார். நிகழ்ச்சியின் வரவேற்புரையை இணைய வானொலி தொகுப்பாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் சுமிதா ரமேஷ் வழங்கினார். அதைத் தொடர்ந்து கிரு.சோழ நாகராஜன் குழுவினரின் கலைவானர் திரையிசை பாடல்கள் மற்றும் IND DUBAI DREAM குழுவினரின் ரீமிக்ஸ் பாடல்களும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக 89.4 எப்.எம் நிர்வாக இயக்குனர் திரு.சோனா ராம் , Power Flow Middle East, நிதி இயக்குனர் –  சமூக ஆர்வலர் முஹம்மது முகைதீன், செற்பொழிவாளர், பட்டிமன்ற பேச்சாளர் முனவைர். தேவகோட்டை ராமநாதன், கராமா மெடிக்கல் சென்டர் குழும நிர்வாக இயக்குனர் வில்லியம் பி.ஜெய்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஸ்ரீ பாதம் நடன பள்ளி குழுவினரின் புஷ்பாஞ்சலி என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வின் இறுதியாக நன்றியுரையை இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், அமைப்பாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஊடகவியலாளர் திருமதி.அஞ்சுகம் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியை தொடக்கம் முதல் இறுதி வரை 89.4 எப்.எம் மயில் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வுக்கு கீழை நியூஸ் நிறுவனம், ராசல் கைமா WIDELENSRAK நிறுவனம். 89.4எஃப்.எம் நிறுவனம், வொண்டர்புல் டிஸ்டிரிபூசன் மற்றும் இன்னும் பல நிறுவனங்கள் ஆதரவு அளித்தன.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..