இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கூடம் அடிக்கல் நாட்டும் விழா..

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுப்பணித்துறை (மருத்துவம்) சார்பாக இன்று (02.12.2018) நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்வியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கான கட்டடப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் .முத்துமாரி தiலைமை வகித்தார்.

இவ்விழாவில் தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலவிதா வழியில் செயல்படும் தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறையோடு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கென்று தனியாக தரை மற்றும் ஐந்து தளங்களுடன் கூடிய கட்டடம் கட்டப்படவுள்ளது.  கட்டடப்பணிகளுக்கு ரூ.18 கோடியும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இக்கட்டடம் 77,600 சதுர அடியில் கட்டப்படவுள்ளது. அவசர சேவைக்காக 2 மின் தூக்கிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. தரை தளம் முழுமையும் வெளிநோயாளிகள் பிரிவு, பிரசவ அவசர பிரிவு, மருந்தகம், ஆய்வகம் போன்ற வசதிகளும், 1வது தளத்தில் பேறு காலத்திற்கு முன் கவனிப்பு மற்றும் அவசரகால அறுவை சிகிச்சை அரங்கமும், 2வது தளத்தில் அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 2 அறுவை அரங்குகளும், 3வது தளத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, குடும்பநல பிரிவு மற்றும் முதல்வர் விரிவான மருத்துவ காப்பீடு பிரிவும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்  ஏற்படுத்தப்படவுள்ளது.

4வது தளத்தில் அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு. 5வது தளத்தில் பேறுகால முன்கவனிப்பு பிரிவு ஆகியவையும் ஏற்படுத்தப்படவுள்ளன. இத்தகைய வசதிகளுடன்கூடிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கான கட்டடப்பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகைதரும் மக்கள் பயன்பெறும் விதமாக எனது முயற்சியில் சிடி ஸ்கேன் ,எம் ஆர்ஐ ஸ்கேன், வென்டிலேட்டர் மார்பக புற்நோயை கண்டறிவதற்கான மேமோகிராம் போன்ற பல்வேறு நவீன மருத்துவ கருவிகள் தருவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இம்மருத்துவமனை வரும் மக்கள் நலனுக்கான சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.12.65 லட்சத்தில் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை அமைத்திட வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இராமநாதபுரம் நகரப் பகுதியில் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் ” இவ்வாது பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் ஜெயதுரை, நிலைய மருத்துவர் சாதிக் அலி, கருப்பசாமி, மலையரசு, தாசில்தார் பொன்.கார்த்திகேயன் உள்பட மருத்துவமனை பணியாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News: Murugan, Mandapam

புனித ரமலான் வாழ்த்துக்கள்..