பணி நிறைவு பாராட்டு விழா…

தமிழ்நாடு மின் வாரியத்தில் இராமநாதபுரம் வருவாய் மேற்பார்வையாளராக பணியாற்றிய வழுதூர் வி.சி.மோகன் 30.11.18 இல் பணி நிறைவு பெற்றதையொட்டி பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இராமநாதபுரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) ஆறுமுகம் பணிநிறைவு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். செயற்பொறியாளர் (பொ) கங்காதரன், மாநில தொ. மு. ச. தலைவர் கணபதி, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கருணாநிதி, மாநில நிர்வாகிகள் தமிழ்செல்வன், ரவீந்திரன், தொ.மு.ச.மாவட்ட நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன், வீரசேகரன்,சபீக்,அலங்காரம், மண்டபம் ஒன்றி தி.மு.க.முன்னாள் செயலாளர் வி.சி.கனகராஜ், லோகநாதன், பட்டணம் காத்தான் சி.ஆர்.எம்மோகன்,டாஸ்மாக் தொ.மு.ச.மாவட்ட செயலாளர் எம்.எஸ்.ராஜா, வழுதூர் துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..