Home செய்திகள் இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்…

இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் இன்று (30.11.2018) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ஆண்டுதோறும் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து மனமகிழ்வும், புத்துணர்வும் ஏற்படுத்திடும்; விதமாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் வீரர், வீராங்கணைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  அதனடிப்படையில் இன்றைய தினம் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.  

விளையாட்டுப் போட்டிகளை பொறுத்தவரை குழுப்போட்டிகளில, மாற்றுத் திறனாளிகளுக்காக ( Orthopedically Handicapped) இறகுப்பந்து ( Singles &Doubles), டேபிள் டென்னிஸ், கண் பார்வையற்றோருக்காக (Total Blind and Partial Sighted) வாலிபால் (Adopted Volleyball) மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக  (Mentally Retarded) எறிபந்து (Throw Volleyball) மற்றும் காது கேளாதோருக்காக (Deaf) கபாடி (Kabbadi)  போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல தடகளப்போட்டிகளில், கை, கால் ஊனமுற்றோர்களில், கால் ஊனமுற்றவர்களுக்காக  50 மீ ஓட்டம் மற்றும் குண்டு எறிதல், கை ஊனமுற்றவர்களுக்காக 100 மீ ஒட்டம், உயரம் குறைந்தவர்களுக்காக 50 மீ ஓட்டம், இரு கால்களும் ஊனமுற்றோருக்காக 100 மீ சக்கர நாற்காலி, பார்வையற்றோர்களில்-  முற்றிலும் பார்வையற்றவர்களுக்காக 50 மீ ஓட்டம், குண்டு எறிதல், மிக குறைந்த பார்வையற்றவர்களுக்காக 100 மீ ஓட்டம், நின்றநிலை தாண்டுதல், Soft Ball, மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் IQ தன்மை முற்றிலும் இல்லாதவர்களுக்காக 50 மீ ஓட்டம், Soft Ball எறிதல், IQ தன்மை நல்ல நிலையில் உள்ளவர்களுக்காக 100 மீ ஓட்டம், Soft Ball,  மூளை நரம்பு பாதிக்கப்பட்டவர்களுக்காக  நின்ற நிலை தாண்டுதல், காது கேளாதோர்களுக்காக 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள் போட்டி, சக்கர நாற்காலி ஓட்டும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.  

​இவ்விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சி.தங்கவேல், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் திரு.பிராங்க் பால் ஜெயசீலன் உள்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் , இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!