அனைத்து நாட்டவரும் தன் நாடாக கொண்டாடும் 47வது அமீரக தேசிய தினம்… CARS கொண்டாட்டம் ஒரு பார்வை – வீடியோ..

அமீரகத்தில் 47 வது தேசிய தினத்தை முன்னிட்டு பல் வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். அமீரகத்தின் ஏழு மாகாணங்கள் ஒருங்கிணைந்த தினத்தை பரைசாற்றும் வகையில் டிசம்பர் 2 அன்று தேசிய தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அமீரகத்தின் தேசிய தினத்தை அந்நாட்டினர் மட்டுமின்றி அங்கு பணிபுரியும் பல நாட்டினரும் தன் சொந்த நாட்டை போலவே குதூகலத்துடனும், சந்தோஷத்துடன் தேசிய தினத்தை கொண்டாடுவது அமீரக அரசு பல நாட்டினரையும் தன் நாட்டவரை போல் அனைத்து சுதந்திரத்துடன் வாழ வழிவகுத்திருப்பதின் அடையாளம் என்றால் மிகையாகாது. இதன் தொடர்ச்சியாக பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த இரண்டு தினங்களாகவே தேசிய தினத்தை கொண்டாட தொடங்கி விட்டனர்.

இதன் தொடர்ச்சியாக தேசிய தினத்தை முன்னிட்டு கார்ஸ் வாகன பரிசோதனை நிலையத்தில் (Cars Vehicle Testing Centre) அல்குரைர் ஆட்டோ மற்றும் கார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெக்லான் மெக் லஸ்கி தலைமையில் கேக் வெட்டி விமர்சையாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் ரங்கநாதன்-தலைமை செயல் அதிகாரி, ஜிஸ்தி-தலைமை நிதி அதிகாரி, அர்சத் பட்டான், மார்க்கெட்டிங் மேனேஜர், பீர் முஹம்மத்-மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை பிரேம் ஆனந்த் குமார்-சீனியர் மேனஜர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பல் வேறு நாட்டை சார்ந்த வாடிக்கயாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Be the first to comment

Leave a Reply