மதுரை கோட்ட பராமரிப்பு பணி – டிசம்பர் 1 முதல் 31 வரை சேவை மாற்றம் ..

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறும் காரணத்தால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. வண்டி எண் 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 01.12.2018 முதல் 31.12.2018 வரை 90 நிமிடங்கள் தாமதமாக பாலக்காடு கோட்டம் சென்றடையும் (வியாழக்கிழமை தவிர).

2. வண்டி எண் 56320 கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் ரயில் 01.12.2018 முதல் 31.12.2018 வரை 45 நிமிடங்கள் தாமதமாக திருவனந்தபுரம் கோட்டம் சென்றடையும் (வியாழக்கிழமை தவிர).

3. வண்டி எண் 56708 மதுரை – திண்டுக்கல் பயணிகள் ரயில் 01.12.2018 முதல் 31.12.2018 வரை 30 நிமிடங்கள் தாமதமாக திண்டுக்கல் ரயில் நிலையம் சென்றடையும் (வியாழக்கிழமை தவிர).

4. வண்டி எண் 56723/56722 மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில்கள் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே 01.12.2018 முதல் 31.12.2018 வரை பகுதிவாரியாக செய்யப்படுகிறது (ஞாயிற்றுக்கிழமை தவிர).

5. வண்டி எண் 5 6 8 2 9 திருச்சிராப்பள்ளி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு 01.12.2018 முதல் 15.12.2018 வரை 25 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் (ஞாயிற்றுக்கிழமை தவிர).

மதுரை – கூடல்நகர் இடையே பழநி ரயில் டிச.12 வரை ரத்து.

வண்டி எண் 56709 பழனி – மதுரை பயணிகள் ரயில் 24.11.2018 முதல் 12.12.2018 வரை கூடல் நகர் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56709 பழனி – மதுரை பயணிகள் ரயில் இரவு 07.10 மணிக்கு கூடல் நகர் வந்தடையும் அந்த ரயிலில் வந்து இறங்கும் பயணிகள் பயணம் செய்வதற்கு ஏதுவாக கூடல்நகர் ரயில் நிலையத்தில் இரவு 07.10 மணிக்கு தமிழக போக்குவரத்து கழக பேருந்து, ரயில் வந்த பிறகு புறப்பட்டு மதுரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image