இராமேஸ்வரத்தில் தேசிய செய்தியாளர் தின விழா..

இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்றம் சார்பில் தேசிய செய்தியாளர் தின விழா நடந்தது. இராமேஸ்வரத்தில் இன்று நடந்த விழாவிற்கு இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற தலைவர் அய்யா.அசோகன் தலைமை வகித்தார். செயலாளர் இரா.மோகன் வரவேற்றார். மேலும் புகைப்பட போட்டியில் மீனவர் உழைப்பை தத்ரூபமாக படம் பிடித்த ஜூ வி போட்டோகிராபர் உ.பாண்டி முதலிடம் பிடித்தார். தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்து ஆழக்குழியில் தண்ணீர் தேடும் பெண்களின் நிலையை படம் பிடித்த இராமேஸ்வரம் தினகரன் போட்டோ கிராபர் பொன்.சத்யா இரண்டாம் இடம் பிடித்தார். தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் போக்கு காட்டி திமிறிய காளையை திமில் பிடிக்க பாய்ந்த காளையரை படம் பிடித்த ராமநாதபுரம் தினசெய்தி போட்டோகிராபர் பா.பாலமுருகன் மூன்றாம் இடம் பிடித்தார். இராமநாதபுரம் தினகரன் போட்டோகிராபர் ஜி.பரமேஸ்வரன், எம்.சீனிவாசன் ஆகியோரது புகைப்படங்கள் ஆறுதல் பரிசு பெற்றன.

இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கேடயம் மற்றும் ரொக்க பரிசு வழங்கி கவுரவித்தார். ஊடகத்துறையில் 20 ஆண்டு பணி நிறைவு செய்த எல்.பாலச்சந்தர் (தி இந்து, போட்டோகிராபர், இராமநாதபுரம்), ஜி.குணாளன் (செய்தியாளர், தினமலர் /திருச்சி பதிப்பு, பரமக்குடி), மா.மு.முத்துச்சாமி (செய்தியாளர், தினசூரியன், பரமக்குடி), வி.ஜோதி ராமலிங்கம் (செய்தியாளர், தினமலர் ராமேஸ்வரம்) உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர். ராமேஸ்வரம் செய்தியாளர்கள் தங்கள் ஊதியத்தில் திரட்டிய ரூ.40 ஆயிரத்தை (வங்கி வரைவோலை) மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். ராமேஸ்வரத்தில் அரசு கல்லூரி, இராமநாதசுவாமி கோயில் வளாக பகுதியில் பழைய மின் கம்பிகளை மாற்றி தரை வழி மின் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தனர். இந்திய கடலோர காவல்படை (மண்டபம் நிலையம்) கமாண்டிங் அதிகாரி எம்.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய காப்பக வனச்சரக அலுவலர் சு.சதீஷ், காவல் துணை கண்காணிப்பாளர் எம்.மகேஷ் ராமேஸ்வரம் தாசில்தார் எம்.சந்திரன், இராமநாதபுரம் செய்தியாளர் சங்க கவுரவத் தலைவர் டி.ஜே.வால்டர் ஸ்காட், தலைவர் கி.தனபாலன், முதுகுளத்தூர் கடலாடி செய்தியாளர் தலைவர் எம்.முருக பூபதி ஆகியோர் பேசினர். இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற பொருளாளர் வி.ஜோதி ராமலிங்கம் நன்றி கூறினார்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலை செல்வம், நூலக ஆர்வலர் விருதாளர் ஆசிரியர் ஜெயகாந்தன், ராமநாதபுரம் செய்தியாளர் சங்க பொருளாளர் பி.மகேஸ்வரன், துணைத் தலைவர் கே.கே.குமார், இணை செயலாளர் ஜி. இளங்கோவன், மூத்த பத்திரிகையாளர் ஒளரங்கசீப், தினமலர் போட்டோகிராபர் (ஓய்வு) மயில்வாகணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..