
தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர், எம்.மணிகண்டன்,மத்திய தொலை தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜனை தொலைத
தொடர்பு அமைச்சகத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது அனைத்து கிராமங்களுக்கும் ஆப்டிகல் ஃபைபர் மூலம் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தும் “பாரத்நெட் “திட்டம் குறித்து பேசினார். தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறை செயலாளர் டாக்டர் .சந்தோஷ் பாபு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிருவாக இயக்குநர் ஜான் லூயிஸ் உடனிருந்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.