பழனி அருகே ஆற்றுப்படுகையில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்…

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியில் இருந்து வரதமாநதி செல்லும் பாதையில் சட்டப்பாறை ஆற்றுப்படுகையில் மணல் திருடப்படுவதாக ஆயக்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பழைய ஆயக்குடி 6-வது வார்டைச் சேர்ந்த அருண்குமார் (வயது 25) என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் திருடி கடத்த முயன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து அருண் குமாரையும், டிராக்டரை ஓட்டி வந்த 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (33) என்பவரையும் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி செய்தியாளர்:- ரியாஸ்

Be the first to comment

Leave a Reply