முதுகுளத்தூர் மணல் கொள்ளை – காவல்துறை அதிகாரி உடந்தையா?? வீடியோ..

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரம் முழுவதும் விளை நிலங்களில் 5 அடி ஆழத்திற்கு கீழ் சுத்தமான ஆற்று மணல் காணப்படுகிறது. இந்த மணலை பணம் பார்க்க எண்ணி மணல் கடத்தல் கும்பல் பணத்தாசை காட்டி முதுகுளத்தூர் டி.எஸ்.பி. உதயசூரியனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மணல் கடத்தல்காரர்கள் டி.எஸ். பி .,க்கு தினமும் கப்பம் கட்டி விடுவதால் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கிறார் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜீவா மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு கொடுத்தார்.

அதில் தினம் மணல் அள்ளுங்கள் என பல லட்சம் கையூட்டாக பெற்று இயற்கை வளங்களை கொள்ளையடிக்கிறார் எனவும் மணல் கடத்தல கும்பல 10 பெயர் விபரங்களுடன் புகார் அளித்து இது நாள் நடவடிக்கை இல்லை. முதுகுளத்தூர் வட்டார பகுதிகளான இளஞ்செம்பூர், மாரந்தை, தேரிருவேலி, காக்கூர், கருமல், கிடாத்திருக்கை உள்ளிட்ட பகுதியில் ஆற்று மணலை இயந்திரம் மூலம் 25 அடி ஆழம் வரை அள்ளிச் சென்று ஒரு யூனிட் மணல் ரூ.40 ஆயிரம் விற்கப்படுகிறது. இதனால் இப்பகுதிகளின் விவசாயம், இயற்கை வளங்கள், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் கொள்ளை நடப்பதால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

டி.எஸ்.பி., யிடம் நேரில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்பதால் மணல் கடத்தல்காரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இப்ப குதிகளில் ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே மணல் கடத்தலை தடுக்க இயலும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..