மத்திய, மாநில அரசை கண்டித்து விவசாயிகள் மாபெரும் பேரணி – வீடியோ..

கஜா புயலினால் அதிகமான அளவிற்கு காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயப் பயிர்களுக்கு நியாயமான விலை இன்றி மிகப்பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல் ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகளை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் அனைத்து விவசாய சங்கங்கள், விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் சென்னையிலிருந்து பாராளுமன்றத்தை நோக்கி பல லட்சம் பேர் கொண்ட பிரமாண்ட பேரணி மற்றும் போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் அனைத்து விவசாயப் பெருமக்கள் மற்றும் 200 விவசாய சங்கங்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்யும் இந்தப்போராட்டம் மற்றும் பேரணி வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..