சமூக ஊடகங்களில் சில சமுதாயங்களை பற்றி அவதூறாக பேசிய வாலிபர் கைது – பொதுமக்கள் போராட்டம்…

கோவில்பட்டி அருகேயுள்ள தலையால் நடந்தான்குளத்தினை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பேச்சிமுத்து, இவர் சில சமுதாயங்களை பற்றி அவதூறாக பேசி வாட்ஸ் அப்,பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவு செய்ததாக கூறியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சமூகங்களை சேர்ந்த பொது மக்கள் கயத்தார் காவல் நிலையத்தினை முற்றுக்கையிட்டு, அவதூறாக சமூக ஊடகங்களில் பேசிய பேச்சிமுத்துவை கைது செய்ய வலியுறுத்தி, கயத்தார் காவல் நிலையத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்தும் டி.எஸ்.பி.ஜெபராஜ் விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். புகார் அளித்தால் உடனடியாக கைது செய்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் கொடுத்தார்.இதையெடுத்து போலீசார் விரைந்து பேச்சிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பொது மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Be the first to comment

Leave a Reply