பேரையூர் கண்மாயில் கண்டெடுத்த பெண் குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு…

முதுகுளத்தூர் அருகே பேரையூர் கண்மாயில் கண்டெடுத்த பெண் குழந்தை உரிய சிகிச்சைக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் அரசு அங்கீகாரம் பெற்ற தத்து மையத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் பேரையூர் கண்மாயில் பிறந்து ஒரே நாளான பச்சிளம்பெண் குழந்தையை 22.10. 18 இல் அப்பகுதி மக்கள் மீட்டனர். பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முதலுதவிக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பினர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலர் மற்றும் குழந்தைகள் நலக்குழு பிரதிநிதிகள் குழந்தையின் சிகிச்சையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஒரு மாத கால சிகிச்சைக்கு பிறகு குழந்தை தற்போது நலமாக உள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அக்குழந்தை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் அரசு அங்கீகாரம் பெற்ற தத்து மையமான மதுரை கிரேஸ் கென்னட் மைய பிரதிநிதிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் நலக்குழு அலுவலர் துரைராஜ், நன்டைத்தை அலுவலர் விஜய சங்கர் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply