Home செய்திகள் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய அரசு ஆய்வுக்குழு பார்வை ..

கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய அரசு ஆய்வுக்குழு பார்வை ..

by ஆசிரியர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று தஞ்சையின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். புதுகோட்டையில் நேற்று ஆய்வை மேற்கொண்ட மத்திய குழுவினர் நேற்றிரவு தஞ்சை வந்தடைந்தனர். இதனையடுத்து இன்று இரண்டாவது நாளாக தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் நிதித்துறை சார்பில் செலவின ஆலோசகர் ஆர்.பி.கவுல்,வேளாண் துறை சார்பில் பி.கே.ஸ்ரீவத்சவா,ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாணிக் சந்த்ரா பண்டிட் ,மின்துறை சார்பில் வந்தனா சிங்கால்,நீர்வளத்துறை சார்பில் ஹர்ஷா, நெடுஞ்சாலை மற்றும் சாலைப்போக்குவரத்து துறை சார்பில் இளவரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்

ஒரத்தநாடு அருகே புதூர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர், மத்திய குழுவினர் ஒரத்தநாடு அருகே புலவன்காடு பகுதியில் சேதமடைந்த தென்னை மரங்களை பார்வையிட்டார். தொடர்ந்து நெம்மேலி பகுதியில் சேதமடைந்த துணை மின்நிலையத்தை பார்வையிட்டு அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் பட்டுக்கோட்டை வட்டம் புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் தென்னை மர்ஙகளை பார்வையிட்ட அவர்கள் அங்கு கூடியிருந்த விவசாயிகளிடம் கஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து கஜா புயலினால் பாதிப்பு சேதமடைந்த படகுகளை பார்வையிட்டு கஜா புயலில் சேதமடைந்த படகுகளை குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தனர்.

செய்தி தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!