சவூதி அரேபியா ஜீஸானில் இறந்த தூத்துக்குடி வாலிபர் ரஞ்சித் ராமநாத் உடல் SDPI உதவியால் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது!..

தூத்துக்குடி முத்தையா புரத்தை சேர்ந்த வாலிபர் ரஞ்சித் ராமநாத்(வயது 27) சவூதி அரேபியா ஜீஸான் என்னும் ஊரில் தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 18 மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 11.08.2018 அன்று பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்புதல் படிவத்தை இந்திய தூதரகம் வழங்கிய போதும் இறந்தவரின் உடல் ஊர் வருவது தாமதமாகியது.

இது குறித்து இறந்தவரின் உறவினர்கள் தமிழ்நாட்டில் SDPI கட்சியிடம் முறையிட்டு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தனர்; இதனடிப்படையில் SDPI கட்சியின் மாநில பொதுசெயலாளர் செங்கோட்டை நிஜாம் முகைதீன் சவூதி அரேபியாவில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இதுவிசயமாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மாநில தலைமையின் உத்தரவுக்கு இணங்க இந்திய ஃபிரட்டர்னிடி ஃபோரம் நிர்வாகிகளான சகோதரர்கள் பைசல் மற்றும் அஃப்சர் ஹுசைன் ஆகியோர் அல்ஹஸ்ஸா கிளை நிர்வாகி ஜின்னாவை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை விரைவாக ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

உடனடியாக களமிறங்கிய ஜின்னா அவர்கள் இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரசின் சட்டத்துறை,மருத்துவத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உடலை இந்தியா அனுப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

SDPI கட்சியின் துரிதமான களப்பணியை அடுத்து இறந்தவரின் உடல் புதன்கிழமை(21.11.2018)அன்று இரவு சவூதி அரேபியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு வியாழன்கிழமை(22.11.2018)காலை சென்னை வந்தடைந்தது.கட்சியின் சென்னை நிர்வாகி ஜாஹிர் ஹுஸைன்(மஞ்சள் கலர் டி ஷர்ட்), உடலை பெற்றுக் கொண்டு இறந்தவரின் தம்பி சுஜீத்திடம் ஒப்படைத்தார்.

இறந்தவரின் உடல் தூத்துக்குடி முத்தையாபுரம் எடுத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் ஏற்பாட்டினையும் செய்து கொடுத்து தூத்துக்குடி SDPI நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்த சகோதரர் ஜாஹிர் ஹுஸைன் மற்றும் அல்ஹஸ்ஸா நிர்வாகி ஜின்னாவுக்கும் மாநில பொதுசெயலாளர் நிஜாம் முகைதீன் பாய்க்கும்,SDPI கட்சிக்கும்,இந்தியன் சோஷியல் ஃபோரத்திற்கும் தங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக இறந்தவரின் தம்பி சுஜீத் கூறினார். செய்தி தொகுப்பு: கீழை ஜஹாங்கீர் அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..