Home செய்திகள் படைப் புழு தாக்குதல் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்…

படைப் புழு தாக்குதல் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்…

by ஆசிரியர்

அரியலூர் மாவட்டம் சன்னாவூர் கிராமத்தில் விவசாயிகள் மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்கத்தால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது காவல்துறையினர் வருவாய் துறையினர் சம்மந்தபட்ட துறை அலுவலர்களை பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பல ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வரும் விவசாயிகள் இது வரை இல்லாத அளவிற்கு படைப்புழு தாக்குதலால் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.ஆனால் அரசு ஏனோ இந்த நோய் தாக்குதலால் கடுமையாக விவசாயிகள் மக்காச் சோளத்தில் இழப்பை சந்தித்தும் உரிய விசாரணை மேற்கொள்ள தயங்குவதன் பின்னணி என்ன என விவசாயிகளால் எழுப்பப்படும் கேள்விக்கு பதிலில்லை.

மேலும் அரியலூர் மாவட்டம் முழுக்க மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் பாதிப்பால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. இந்த படைப்புழு தாக்குதலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டதே தவிர எந்தவிதத்திலும் பூச்சிகளின் தாக்கம் குறையவே இல்லை.

படைப்புழு தாக்குதலுக்கான காரணம் என்னவென்று விரிவான விசாரணை வேண்டும். அத்தோடு அல்லாமல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட விதை தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய விசாரணை மற்றும் மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை மறியலை கைவிடக் கோரி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளித்ததன் பேரில் சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!