Home செய்திகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் வாரிசுகளுக்கான புராஜெக்ட் நியூஸ் விங்ஸ் துவக்க நிகழ்ச்சி..

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் வாரிசுகளுக்கான புராஜெக்ட் நியூஸ் விங்ஸ் துவக்க நிகழ்ச்சி..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் வாரிசுகளுக்கான புராஜெக்ட் நியூஸ் விங்ஸ் துவக்க நிகழ்ச்சி 22.11.2018 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-துப்புரவு பணியாளர்களின் குடும்பங்கள் பல தலைமுறைகளாக இதே தொழிலில் ஈடுபடும் நிலை உள்ளது. இதை மாற்றுவதற்காக ஏற்கனவே இத்திட்டம் திருநெல்வேலி மாவடடத்தில் ஏற்கனவே துவக்கப்பட்டு துப்புரவு பணியாளர்களின் வாரிசுகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர். இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 4500 குடும்பங்களை சேர்ந்த சுமார் 16,000 நபர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். துப்புரவு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி பயிலவும், உயர்கல்விக்கு தேவையான உதவிகளும் வழங்கப்படும். மேலும் வேலைக்கு செல்ல விரும்பும் 18 வயது முதல் 25 வயதுள்ளவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் மூலம் தனித்திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சுயமாக தொழில் செய்திட விரும்பும் நபர்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயிற்சியும், கடனுதவிகளும் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு அதிக அளவிலான வருகை தந்துள்ள நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைய உறுதியுடன் இருக்க வேண்டும். நான் எனது ஊரில் மட்டும்தான் இருக்க வேண்டும். நான் எனது ஊரில் மட்டும் தான் இருப்பேன் என்றில்லாமல் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எங்கும் பயிற்சியில் சேரவும் வேலைக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும். இத்திட்டம் குறித்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இத்திட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்படவுள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் வாரிசுகள் பல்வேறு தொழில்களுக்கு சென்று முன்னேற்றமடைய செய்யும் இத்திட்டத்திற்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) டாக்டர் அனு இ.ஆ.ப. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி துணை இயக்குநர் திருமதி ஏஞ்சல் விஜய நிர்மலா, வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர் திருமதி பேச்சியம்மாள், ICICI வங்கி பயிற்சி மேலாளர் திரு.ஹரிகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!